ஆரணி, கீழ்பென்னாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்


ஆரணி, கீழ்பென்னாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
x

ஆரணி, கீழ்பென்னாத்தூர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் ேமற்கொண்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி, கீழ்பென்னாத்தூர் பகுதியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் ேமற்கொண்டனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ.டி.வரியை ரத்து ெசய்ய வேண்டு எனவும் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையிலும் மத்திய அரசை எதிர்த்து ஆரணி பகுதியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். நேற்று 2-வது நாளாக மாவட்டத் தலைவர் தவனி வி.பி. அண்ணாமலை தலைமையில் ஆரணியில் இருந்து விண்ணமங்கலம், பெரிய கொழப்பலூர் வரை நடைபயணம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் வசந்த் ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

நடைபயணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.அசோக்குமார். மாவட்ட பொதுச் செயலாளர் உதயகுமார், நகர மன்ற உறுப்பினர் மறுதேவி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து நடைபயணத்தை திருவண்ணாமலை நகர தலைவர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார். வட்டாரதலைவர் மோகன்குமார், நகரதலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

பாதயாத்திரை கீழ்பென்னாத்தூர் பஸ்நிலையத்தில் தொடங்கி சிறுநாத்தூர் வழியாக சென்று காட்டுக்குளத்தில் முடிவடைந்தது. அப்போது மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பிரச்சாரம் செய்தபடி சென்றனர். இதில், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.



Next Story