காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

தூத்துக்குடி

மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு, கறி, மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story