காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மைத்துறை, எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேராவூரணி காந்தி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மைப்பிரிவு மாவட்ட தலைவர் நாகூர் கனி தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன், பட்டுக்கோட்டை நகரத்தலைவர் வக்கீல் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் பேசினர். இதில் மாவட்டத்தலைவர் பிரபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சங்கர சூரியமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story