காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறித்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாலங்காடு கடைவீதியில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அகமது தலைமை தாங்கினார், வட்டாரத் தலைவர்கள் பரதன்,ஜம்பு கென்னடி,கோடிமங்கலம்செந்தில், பூவாலைமதி, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் பேரூர் தலைவர் சூர்யா வரவேற்றார். இதில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாநில செயலாளர் கனிவண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம், கலியபெருமாள், பார்த்தசாரதி, நவாஜுதீன்,ஹபீப்,ரவி, சீனிவாசன், ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி, நகர பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. வெடி பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில், கமலக்கண்ணன், காசி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் குத்தாலம் பேரூர் செயலாளர் பூர்விகா செந்தில் நன்றி கூறினார்.

1 More update

Next Story