அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

தரகம்பட்டியில் கடவூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கடவூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மலையாண்டி தலைமை தாங்கினார். இதில் மேலபகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் காங்கிர கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story