தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்த படி அமலாக்கதுறையை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதுபோல் தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் (மாநகர், தெற்கு, வடக்கு) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு அமலாக்கத்துறையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், மாவட்ட தேர்தல் அதிகாரி வளசலன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் ஐ.என்.டி.யூ.சி.மாநில அமைப்புச் செயலாளருமான பெருமாள்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story