காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மத்திய அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் நகர மன்ற உறுப்பினர் தேவராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, கள்ளக்குறிச்சி நகர தலைவர் குமார், சின்னசேலம் நகர தலைவர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் இளவரசன், மாநில மீனவரணி நிர்வாகி ராஜீ, நிர்வாகிகள் ஆறுமுகம், செல்வராஜ், பவுனாம்மாள், அஞ்சலை உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story