காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசார கூட்டம்


காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசார கூட்டம்
x

கலவை பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசார கூட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் ஆகியோரின் ஆணைக்கிணங்க கலவை பேரூராட்சி பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கலவை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஆசிரியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நகர துணைச் செயலாளர் குமார், மூர்த்தி ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம் சிறப்புரையாற்றினார். திமிரி ஒன்றிய காங்கிரஸ் குழு உறுப்பினர்கள், ஆற்காடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story