காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றுக்காக மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த போராட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை அரியலூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியதாக மத்திய அரசை கண்டித்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பாக ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை மாநில துணை தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து 52 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதற்கிடையே மறியலில் ஈடுபட்டவர்களிடம், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர்கள் திருநாவுக்கரசு, கங்காதுரை தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 22 பேரை கீழப்பழுவூர் போலீசார் கைது செய்தனர்.


Next Story