சிவாஜி உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் சிவாஜி உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் நேற்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், அவருடைய ரசிகர் மன்றத்தின் சார்பிலும் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு சிவாஜிகணேசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர்கள் மாரியப்பன், வண்ணை சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், சிவாஜி மன்ற நிர்வாகிகள் கலைமணி, சிவாஜி முத்தையா, கஸ்பர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு பேரங்காடி முன்பு வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் உருவப்படத்துக்கு சிவாஜி சமூக நலப்பேரவையினர் மாவட்ட தலைவர் கலைமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.