காங்கிரசார் மறியல் போராட்டம்;32 பேர் கைது


காங்கிரசார் மறியல் போராட்டம்;32 பேர் கைது
x

திருப்பரங்குன்றம் அருகே காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் 9 மணி நேரம் விசாரணை செய்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் முல்லை நகர பஸ் நிறுத்தத்தில் மதுரை - திருமங்கலம் பிரதான ரோட்டில் மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் தனக்கன்குளம் பழனிக்குமார் ஆகியோர் தலைமையிலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், சுப்பிரமணியன், தகவல் அறியும் சட்டத்துறை பிரிவு மாநில பொதுச்செயலாளர் சத்தியன் சிவன்,.அமைப்பு சாரா தொழிலாளர் பணியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன்மகாலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பகவான், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதமர் நரேந்திரமோடியின் உருவப்பொம்மையையும் எரித்தனர்.இது தொடர்பாக தகவல் அறிந்த திருநகர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story