வேதாரண்யத்தில் சுதந்திர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு காங்கிரசார் ஊர்வலம்


வேதாரண்யத்தில் சுதந்திர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு காங்கிரசார் ஊர்வலம்
x

வேதாரண்யத்தில் சுதந்திர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு காங்கிரசார் ஊர்வலம் நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

காங்கிரசார் ஊர்வலம்

வேதாரண்யத்தில் வட்டார, நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமையில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. வேதாரண்யம் அருகே தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரசார் குருகுலம் பள்ளியில் உள்ள தியாகி சர்தார் வேதரத்தினம் நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வேதாரண்யம் பகுதி தியாகிகளின் நினைவாக கீழசன்னதியில் உள்ள நினைவு ஸ்தூபியிலும், வடக்கு வீதியில் உள்ள உப்புச் சத்யாகிரக நினைவு கட்டிடத்தில் அமைந்துள்ள தியாகிகள் சர்தார் வேதரத்தினம் வைரப்பன், சுப்பையாப்பிள்ளை ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், சர்தாரின் பேரன் கயிலைமணி வேதரத்தினம், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜூனன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமன் கோவிந்தராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் உசேன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அயூப்கான், ஐ.என்.டி.யூ.சி. உப்புத் தொழிலாளர்கள் சங்க துணைத்தலைவர் தங்கமணி, பஞ்சாயத்து ராஜ் மாவட்ட பிரிவு பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story