காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2023 12:15 AM IST (Updated: 9 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலட்சுமி தலைமை தாங்கினார். மண்டல தலைவிகள சாந்தி, பிரீத்தி, வள்ளி, சுகுணா, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். அதே போன்று சிலிண்டர் விலை உயர்வால் ஏழை-எளிய மக்கள் பழைய காலம் போல் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜ், மண்டல தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, மாவட்ட செயலாளர் கோபால் உள்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

1 More update

Next Story