மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பரமக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி,
பரமக்குடி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் டார்ச் லைட் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கோட்டை முத்து, மாநில செயலாளர் செந்தாமரை கண்ணன், ஆனந்தகுமார், கோதண்டராமன், மாவட்ட துணைத் தலைவர் சோ.பா. ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் டார்ச் லைட் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜோதி பாலன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் சரவண காந்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்ட் கணேசன், வட்டார தலைவர்கள் வேலுச்சாமி, சுப்பிரமணியன், ராஜீவ் காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாராயணன், ஹாரிஸ், தொழிற்சங்க தலைவர் கர்ணன், ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் காஜா நஜ்முதீன் ஆறுமுகம், அருள் மேரி, ஏ.பி. மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.