தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x

மதுரை, திருப்பரங்குன்றத்தில் தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை


மதுரை, திருப்பரங்குன்றத்தில் தமிழக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பும், முனிச்சாலை உள்ளிட்ட இடங்களில் மதுரை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர். கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், கவர்னர் அரசியல் கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார். அதனை மாற்றி மக்களுக்காக நற்பணிகளை செய்யும் தி.மு.க. அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் சந்திரமோகன், கவுன்சிலர்கள் முருகன், எஸ்.எஸ்.போஸ், தல்லாகுளம் முருகன், ராஜ் பிரதாபன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு, துரையரசன், மாவட்ட துணைத் தலைவர் பறக்கும் படை பாலு, நகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல், மாநில பொதுச்செயலாளர் வக்கீல் ராஜாபிரசாத், மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷானவாஸ் பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் ஏ.எஸ்.வி. மகேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன், தகவல் அறியும் உரிமை சட்டபிரிவு மாநில துணை தலைவர் ஜெரால்டு சத்யன், அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மாவட்ட தலைவர் பொன்மகாலிங்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் பொன் மனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் காசிநாதன், கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி, வட்டார தலைவர்கள் காசி, முத்துவேல்பகுதி தலைவர்கள் வேல்முருகன், நாகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

மேலூர்

மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மேலூர் செக்கடி பஜாரில் தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் நூர்முகமது, மாநில கமிட்டி உறுப்பினர் கொட்டாம்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் திலகராஜ், ஓ.பி.சி. மாவட்டத்தலைவர் முருகன், மேலூர் நகரத் தலைவர் மகாதேவன், மேலூர் சட்டமன்ற இளைஞரணி செயலாளர் திருமணி சிற்பி, வாடிப்பட்டி நகர தலைவர் முருகானந்தம், அலங்காநல்லூர் வட்டார தலைவர் சுப்பராயலு, வடக்கு வட்டார தலைவர் பாலமேடு காந்தி, மாநிலச் செயலாளர் ஜெயமணி, துணைச் செயலாளர் திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story