நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'அக்னிபத்' திட்டத்தை கைவிடக்கோரியும், நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டபோது கிடைத்த ஆற்று மணலை கொள்ளையடித்த மாநகராட்சி அதிகாரிகளை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், மூத்த நிர்வாகி லெனின் பாரதி, பொதுச் செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், பாக்கியகுமார், துணைத்தலைவர்கள் உதயகுமார், வெள்ள பாண்டியன், கவிபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story