சேலத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சேலத்தில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் கார்த்திக் தங்கபாலு கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திருமுருகன், ஷாநவாஸ், பச்சப்பட்டி பழனிசாமி, ரகுராஜ், ஷேக் இமாம், பிரபு, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர் விஜய் ஆனந்த், மாநகர பொதுச்செயலாளர்கள் கார்த்தி, குமரசேன், அமைப்பு சாரா மாநகர தலைவர் ஈஸ்வரி வரதராஜ், கவுன்சிலர் கிரிஜா, விவசாய பிரிவு சிவகுமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டு நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பெரும் தொகையை முதலீடு செய்ய துணை போன மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்களின் பணம் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுத்திய மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரசார் வலியுறுத்தினர்.