விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்;

மத்திய மோடி ஆட்சியில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, உணவுப்பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வு, 5 ஜி அலைக்கற்றை ஊழல் ஆகியவற்றை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் எம்.டி.குலாம்மொய்தீன், அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், நகரமன்ற கவுன்சிலர் சுரேஷ்ராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர்கள் விஜயரங்கன், ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், தனசேகரன், சேகர், ராஜேஷ், ஐ.என்.டி.யு.சி. மாநில இணை செயலாளர் காஜாமொய்தீன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மகிளா காங்கிரஸ் தலைவர் லதாபீட்டர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங் மற்றும் வட்டார தலைவர்கள், நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story