விழுப்புரம், திண்டிவனத்தில் காங்கிரசார் போராட்டம்


விழுப்புரம், திண்டிவனத்தில் காங்கிரசார் போராட்டம்
x

பா.ஜ.க.அரசை கண்டித்து விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கில் பல மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் கேள்வி எதுவும் கேட்காமல் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தொடர் விசாரணைக்கு அலைக்கழித்துள்ளதை கண்டித்தும், பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்தும், சோனியாகாந்தியை இந்த விசாரணையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியும் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் நேற்று மாலை அமைதிவழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வக்கீல் தயானந்தம் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.டி.குலாம்மொய்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர்கள் விஜயரங்கன், ராஜ்குமார், நாராயணசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜேஷ், சேகர், ரவி, சர்தார்கான், வீராசாமி, முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் முபாரக்அலி, நகரமன்ற கவுன்சிலர் இம்ரான்கான், ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் காஜாமொய்தீன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திண்டிவனம்

இதேபோல் திண்டிவனம் காந்தி சிலை அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் விநாயகம், மாவட்ட பொருளாளர் கருணாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் தனுஷ், குமார், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, தட்சணாமூர்த்தி, சூரியமூர்த்தி, சக்திவேல், புவனேஸ்வரன், செல்வம், சுப்பிரமணி, இருதயராஜ், ஜானி, மதன்குமார், பொன் ராஜா, அஜிஸ், பார்த்திபன், ஜெய்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story