காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் மணிரத்தினம் கலந்து கொண்டு எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ.சொத்துகளை அதானி குழுமத்திற்கு மத்திய அரசு தாரைவார்ப்பதாக கூறி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் அசோக், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தமிழ் கண்ணன், வீரமுத்து, தேவராஜ், இளவரசன், துரைராஜ் இளையபெருமாள், சின்னசேலம் நகர தலைவர் ஏழுமலை, தியாகதுருகம் வட்டார தலைவர் கொளஞ்சியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன், வட்டார தலைவர் பெரியசாமி, மீனவரணி மாவட்ட தலைவர் ராஜி உள்பட மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story