காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
ராகுல்காந்தி எம்.பி.யின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அதன்படி நேற்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாமக்கல் உழவர்சந்தை அருகே தொடங்கிய நடைபயணம் பூங்கா சாலை வழியாக பஸ்நிலையம் அருகே உள்ள நேரு பூங்காவில் நிறைவு பெற்றது. முன்னதாக மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிய காங்கிரஸ் கட்சியினர், காமராஜர் மற்றும் நேரு சிலைக்கு மாலை அணிவித்து நடைபயணத்தை முடித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், நகர காங்கிரஸ் தலைவர் மோகன், மாநில ஓ.பி.சி. பிரிவு துணை தலைவர் டாக்டர் செந்தில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வி.பி.வீரப்பன், பாச்சல் சீனிவாசன், வட்டார தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ, சீனிவாசன், ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.