பேரூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 10 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு


பேரூர் அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- 10 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேரூர் அருகே 2 வீடுகளில் 10 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

பேரூர்

பேரூர் அருகே 2 வீடுகளில் 10 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அதிர்ச்சி

பேரூர் அருகே தீத்திபாளையம், விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்தநிலையில் வெள்ளியங்கிரி வேலைக்கு சென்றுவிட்டார்.

குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர் வெள்ளியங்கிரி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின பீரோவில் இருந்த 6 பவுன் நகை உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

இதேபோல், பேரூர் செட்டிபாளையம் அருகே போஸ்டல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார் (41), டிரைவர். இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை திலீப்குமார் தனது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு விட்டு விட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், திலீப்குமார் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த, 2 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க வளையல்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பேரூர் பகுதியில் 2 வீடுகளில் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story