பஞ்சாயத்து அலுவலகம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு


பஞ்சாயத்து அலுவலகம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து திருட்டு
x
தினத்தந்தி 13 Oct 2022 1:15 AM IST (Updated: 13 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:-

நல்லம்பள்ளியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 இடங்களில் திருட்டு

நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நல்லம்பள்ளியில் உள்ள டீகடை, நகை அடகு கடை, அதியமான்கோட்டை கீழ் காளியம்மன் கோவில் உள்பட 4 இடங்களில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு ரொக்கம் உள்ளிட்டவை திருட்டு போனது.

தகவலின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் திருட்டு நடந்த 4 இடங்களில் நேரில் சென்று விசாரனை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்மூலம் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தினர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடந்த கொள்ைள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 பேர் கைது

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக, நல்லம்பள்ளி கோவில் தெருவை சேர்ந்த செரபாண்டராஜ் (வயது 35), கார்த்திக் (34) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில் உண்டியல், எல்.இ.டி. டி.வி. உள்ளிட்டவற்றை மீட்டனர்.பிடிபட்ட மூன்று பேரும் வேறு ஏதாவது திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story