விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி


விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி
x

பகண்டை கூட்டுரோடு அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள வாணாபுரத்தை சேர்ந்தவர் கதிர்வேலு மகன் அருள்குமார்(வயது 26). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் மாடாம்பூண்டி கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு உறவினருடன் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரூர் புதூர் அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையோரம் கரும்புலோடுடன் நின்றுகொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கம் அருள்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருள்குமார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து கொண்டிருந்த அவரது உறவினர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இது குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story