புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்


புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்
x

புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது

திருச்சி

கல்லக்குடி பேரூராட்சி புதிய சமத்துவபுரத்தில் டால்மியா சிமெண்டு ஆலை சமூக மேம்பாடுதிட்ட நிதி உதவியுடன் ரூ.8 லட்சத்தில் புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சிதலைவர் பால்துரை தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், துணைத்தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சமீபத்தில் நடைபெற்ற நித்ய கல்யாணி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு பேரூராட்சி தலைவர் ஆடைகள் வழங்கினார். பின்னர் அவர் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி கல்லக்குடியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியை புதுவாக்கரையில் முகூர்த்தகால் தொடங்கி வைத்தார். விழாவில் டால்மியா சமூக மேம்பாடு திட்டஅலுவலர் நாகராஜன், பேரூராட்சி கவுன்சிலர் அம்பேத்கார், லெட்சுமி பைப் கம்பெனி பாலசுப்பிரமணியன், டால்மியாபுரம் ஷைன் லயன் சங்க சாசன தலைவர் ஜான், பட்டையார் ரமேஷ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பகுதி வாழ் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக இளநிலை அலுவலர் செல்வமணி வரவேற்றுப் பேசினார். முடிவில் இளநிலை அலுவலர் செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.


Next Story