அரசு பள்ளியில் ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி


அரசு பள்ளியில் ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி
x
தினத்தந்தி 10 May 2023 6:45 PM GMT (Updated: 10 May 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் ரூ.2 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய உருது தொடக்கப்பள்ளி (ஆண்கள்), ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் நலன் கருதி இங்கிருந்த பழுதான வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அதற்கு பதில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.1 கோடியே 99 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 3 பள்ளிகளுக்கு தலா 4 புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளிடம் கட்டுமான பணிகளை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ராமு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story