ரூ.60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி
அச்சமங்கலம், மாக்கனூர் பள்ளிகளில் ரூ.60 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை தேவராஜ் எம்.எல்.ஏ. ஆய்வுசெய்தார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளிலும் போதிய கட்டிட வசதி இல்லாமல் ஒரு வகுப்பறையில் 2 வகுப்புகள் நடத்தப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் 2பள்ளிகளுக்கும் கூடுதல் வகுப்பறை கட்ட ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பேரில் 2 பள்ளிகளுக்கும் தலா ரூ.30 லட்சம் வீதம் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை க.தேவராஜி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story