ரூ.12 லட்சத்தில் பஸ் நிறுத்தம் கட்டும் பணி
ரூ.12 லட்சத்தில் பஸ் நிறுத்தம் கட்டும் பணியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் உள்ள நான்கு வழிச்சாலையில் புதிய பஸ் நிறுத்தம் கட்ட எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமாரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பஸ் நிறுத்தம் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் புதிய பஸ் நிறுத்தத்துக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகரச் செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், கவுன்சிலர்கள் சுப்பையா, ராமு, ஈஸ்வரன், நிர்வாகிகள் மகேந்திரன், இளங்கோ, ரவி, சேகர், கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தேவதாஸ், விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.