ரூ.34 கோடியில் மேம்பாலம், சாலை அமைக்கும் பணி


ரூ.34 கோடியில் மேம்பாலம், சாலை அமைக்கும் பணி
x

திருப்பத்தூர் பகுதியில் ரூ.34 கோடியில் நடைபெறும் மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

மேம்பாலம்

திருப் பத்தூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் ரூ 50கோடியில் நடைபெ றும் பல்வேறு பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறி யாளர் எஸ்.பழனிவேல், கோட்ட பொறியாளர் இ.முரளி நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். அப்போது சாலை பணி களை மார்ச் மாத இறுதிக் குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ள பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களை இணைக்கும் தரைப்பாலங்களில் போக்குவரத்து நடைபெறுவது சிரமமாக இருந்தது. இதனால் 22 தரைப் பாலங்களை 14 உயர்மட்ட பாலமாக ரூ.30 கோடியில் மாற்றி அமைக்கும்பணி சின்னராம்பட்டி, உடையமுத்தூர், ஏழருவி, செலந்தம்பள்ளி, சொர்கயல்நத்தம், பச்சூர், கொத்தூர், அரங்கல்துர்கம், ஆலங்காயம், பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதனை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் தரத்துடன் உள்ளதா என பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தார்.

மார்ச் மாதத்திற்குள்

மேலும் நாட்டறம்பள்ளி - புதூர்நாடு செல்லும் 14 கி.மீ. சாலை பணி மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணி ரூ.4 கோடியில் வனத்துறை அனுமதியுடன் நடந்து வருகிறது. சாலையின் அகலம், தடுப்புச்சுவரின் உறுதித் தன்மையையும் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்து, பணியை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

தர்மபுரி சாலையில், குனிச்சி பகுதியில் நடை பெறும் சாலை விரிவாக்க பணி, ஏலகிரிமலை சாலைபணி ஆகியவற்றையும் ஆய்வு செய்து, போடப்பட்ட தார் சாலையின் தடிமன் மற்றும் தாரின் தரங்களை ஆய்வு செய்தார். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள ஆம்பூர் நகரம் மற்றும் பேரணாம்பட்டு சாலை பகுதிகளை ஆய்வு செய்து, சாலைகளை போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்றவாறு அகலப்படுத்தி மேம்படுத்த அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது உதவிக்கோட்ட பொறியாளர்கள் மீ.மணி சுந்தரம், ஜெ.அன்புஎழில், உதவிப்பொறியாளர் வெ.சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story