நெல்லையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்
நெல்லையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 23-வது வார்டு வெள்ளம்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி, புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மண்டல தலைவர் மகேஸ்வரி, மாநகராட்சி கவுன்சிலர் அனார்கலி சுபானி, பகுதி துணை செயலாளர் சுபானி, ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 32-வது வார்டு செயிண்ட் பால் ரோடு பகுதியில் ரூ.18 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் புதிய கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி, இலந்தகுளம் மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.17 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், கவுன்சிலர் அனுராதா சங்கரபாண்டியன், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர் பைஜூ, உதவி பொறியாளர் தனராஜ், சுகாதார அலுவலர் முருகேசன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், வார்டு சபா உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஒப்பந்ததாரர்கள் ஸ்ரீவை.சின்னத்துரை, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் 24-வது வார்டு ஜவஹர்லால் தெருவில் ரூ.21 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினை துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் ரவீந்தர், நித்தியபாலையா, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், இளநிலை பொறியாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.