புதிய தார்சாலை அமைக்கும் பணி


புதிய தார்சாலை அமைக்கும் பணி
x

ஜோலார்பேட்டையில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் ரோடு சாலை பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். எனவே தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நகராட்சி மூலம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகளின் இருபுறமும் கால்வாய் மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் ஏற்படுத்தி, தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனை நகரமன்ற தலைவர் எம்.காவியா விக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து சாலையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ஜி.பழனி, பொறியாளர் பி.சங்கர், நகர செயலாளர் ம.அன்பழகன், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் சி.எஸ்.பெரியார் தாசன் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story