ரூ.16 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
இனாம் மணியாச்சி பஞ்சாயத்தில் ரூ.16 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் பொது நிதியில் இருந்து இனாம் மணியாச்சி பஞ்சாயத்து, அத்தை கொண்டானில் ரூ.6 லட்சம், சீனிவாசநகரில் ரூ.4.5 லட்சம், இந்திரா நகரில் ரூ.5.5 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் முன்னாள் யூனியன் துணை தலைவர் சுப்புராஜ், முன்னாள் நகரசபை கவுன்சிலர் அருணாசல சாமி மற்றும் அலுவலர்கள் சென்றனர்.
Related Tags :
Next Story