ரூ.25 கோடியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி தொடக்கம்
உளுந்தூர்பேட்டையில் ரூ.25 கோடியில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
திருப்பதி தேவஸ்தானம் போர்டு சார்பில் உளுந்தூர்பேட்டையில் ரூ.25 கோடி செலவில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடக்க விழா உளுந்தூர்பேட்டையில் நேற்று நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் திருப்பதி தேவஸ்தானம் போர்டு அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ், எம்.எல்.ஏ.க்கள் மணிக்கண்ணன், செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story