கட்டிட கழிவுகள் அகற்றம்


கட்டிட கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட கழிவுகள் அகற்றம்

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே கொல்லப்பட்டியில் இருந்து கரப்பாடி செல்லும் வழியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது கழிப்பறை இருந்தது. இது கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், சுவர்கள் விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலைக்கு சென்றது. இதனால் அந்த கழிப்பறையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த கழிப்பறை இடித்து அகற்றப்பட்டது. ஆனால் புதிய கழிப்பறையும் கட்டப்படவில்லை, கட்டிட கழிவுகளும் அகற்றப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 27-ந் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கட்டிட கழிவுகளை அகற்றினர். மேலும் புதிய கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு காரணமான 'தினத்தந்தி' நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story