திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்


திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
x

திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியில் சாலை அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டு்ம் பணி நடந்தது.

செங்கல்பட்டு

திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பஸ்நிலைய இணைப்பு சாலை, விளம்பி விநாயகர் கோவில் தெரு, வேம்படி விநாயகர் கோவில் தெரு, ஏரிக்கரை 1-வது தெரு, 2-வது தெரு போன்ற பகுதிகளில் பழைய சேதமடைந்த சாலைகளை அகற்றிவிட்டு புதிய சிமெண்டு சாலைகள் அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், வார்டு உறுப்பினர் மீனாகுமாரி சந்திரன் ஆகியோர் முன்னிலையில், தெற்கு மாடவீதியில் சாலை அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டு்ம் பணி நடந்தது. குடிநீர் குழாய்கள், மின் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story