கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருச்செங்கோட்டில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்

திருச்செங்கோடு

கட்டிட தொழிலாளி

திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை வெங்கடேஷ் இறந்துவிட்டார். சசிகுமார், தனது தாயாருடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை சசிகுமார் தற்கொலைக்கும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 21-ந் தேதி இவரது தாயாா் உறவினர் வீட்டு திருமணத்திற்காக பல்லடம் சென்றார். இந்தநிலையில் யாரும் இல்லாத நேரத்தில் சசிகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது சசிகுமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் கதவை உடைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சசிகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story