மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
x

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் கலைச்செல்வன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவர் லயன்ஸ்டவுன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வீட்டில் மின் மோட்டார் மூலம் சுவற்றுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக இவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த கலைச்செல்வன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story