கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூரில் உள்ள நல வாரிய அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 35-வது நலவாரிய கூட்ட முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும். பென்ஷன் ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமை படுத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் உபகரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.


Next Story