கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட எச்.எம்.எஸ். கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். எஸ்.ராஜன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் சேகர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை துணைத் தலைவர் என்.சரவணன் தொடங்கி வைத்து பேசினார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும், வீடு கட்ட ரூ.4 லட்சம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும், மருத்துவ உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முடிவில் ஒன்றிய செயலாளர் ரங்கசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story