கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கியதை போன்று பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். கடந்த 2001-ம் ஆண்டு முதல் வழங்கி வந்த ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டு 14 நிபந்தனைகளை உட்படுத்தி தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பென்ஷன் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.


Next Story