பென்னாகரம், பாலக்கோடு அரசு கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
தர்மபுரி:
பென்னாகரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பாக்கியமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பென்னாகரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி. கணிதவியல், கணினி அறிவியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. எனவே இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ மாணவிகள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் உரிய மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிரப்பபடாமல் உள்ள காலியிடங்களுக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது என்று கல்லூரி முதல்வர் செண்ப லட்சுமி தெரிவித்துள்ளார்.