கலந்தாய்வு கூட்டம்


கலந்தாய்வு கூட்டம்
x

கலந்தாய்வு கூட்டம்

தென்காசி

சிவகிரி:

சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வருகிற 13-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடக்கிறது. இதில், நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரச தீர்வு காண கலந்தாய்வு கூட்டம் சிவகிரி கோர்ட்டில் நடைபெற்றது. சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கி அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில், சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், கடையநல்லூர் மண்டல துணை தாசில்தார் கணேசன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், வாசுதேவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story