கல்குவாரிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம்


கல்குவாரிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம்
x

கல்குவாரிகளுக்கான கருத்துகேட்பு கூட்டம் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை அக்கலாம்பட்டி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதேபோல் நேற்று மாலையில் கோக்கலை கிராமத்தில் 4 இடங்களில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குவாரிகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தங்களது கருத்துகளை வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் தெரிவித்தனர். இந்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கிருஷ்ணன், உதவியாளர் பொறியாளர் சந்தகிருஷ்ணன், தொழிற்சாலை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story