தென் மண்டல அளவில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம்


தென் மண்டல அளவில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம்
x

தென் மண்டல அளவிலான கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்காக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மதுரை


தென் மண்டல அளவிலான கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்காக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கருத்து கேட்பு கூட்டம்

தென்மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், காவல்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் காவல் ஆணைய தலைவரான ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தென் மண்டலத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்தல், காவல்துறை செயல்பாடுகளை மேம்படுத்துவது, மாவட்ட நிர்வாகம் - போலீசார் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

10 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு

இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன், ஐ.பி.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன், நளினி ராவ், மனநல சிறப்பு டாக்டர் ராமசுப்பிரமணியன், தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன்நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மதுரை கலெக்டர் சங்கீதா, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை கமிஷனர்கள் குமார், மங்களேஸ்வரன், பிரதீப், சினேகப்பிரியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், மதுரை நகர் துணை கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story