சிவகிரி அருகே ஆலோசனை கூட்டம்


சிவகிரி அருகே ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 11:38 AM GMT)

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அங்குள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாடசாமி, சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தேவிபட்டணம் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தேவிபட்டணம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்களை அந்த சமுதாய பொறுப்பாளர்களே பிடித்து காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். யாரேனும் மதுபாட்டில் விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டால் அவர் சார்ந்த சமூகத்தில் இருந்து தேவிபட்டணம் ஊராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் கொடுக்க வேண்டும். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் மதுபாட்டில் விற்பனை செய்தவரின் வீட்டில் குடிநீர் மற்றும் மின்இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வாசுதேவநல்லூர் யூனியன் 1-வது வார்டு கவுன்சிலர் நீரத்திலிங்கம், தேவேந்திரகுல வேளாளர் நாட்டாமை தங்கம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயராஜ், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவேந்திரகுல சமாதான தலைவர் சவுந்தரராஜன், குலாளர் சமுதாய தலைவர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்கராஜ், ராமராஜ், குருசாமி, தங்கராஜ், கனக ஜோதி, கிரேஸி, அழகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story