போலீஸ் நிலையத்தில் குற்றங்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்


போலீஸ் நிலையத்தில் குற்றங்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
x

போலீஸ் நிலையத்தில் குற்றங்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வேலூர்

போலீஸ் நிலையத்தில் குற்றங்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் குற்றங்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கருணாகரன், ரவி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு பேசுகையில், ''வேலூரில் குற்றங்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து கூடுதல் கண்காணிப்பு அவசியம். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும். சமீபத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை பிடிக்க வேண்டும். மேலும் அனைத்து நகைகளையும் மீட்க வேண்டும்'' என்றார்.

================


Next Story