எத்தனால் உற்பத்தி பற்றிய கருத்து கேட்பு கூட்டம்


எத்தனால் உற்பத்தி பற்றிய கருத்து கேட்பு கூட்டம்
x

மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1 உள்ளது. இந்த ஆலையில் எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஆலையில் நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் எத்தனால் மற்றும் 1.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆலை மேலாண்மை இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கினார். இதில் மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், எத்தனால் உற்பத்தி செய்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். எனவே மூங்கில்துறைப்பட்டு பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் ஆலையின் மூலம் அதிக அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். கூட்டத்தில் விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story