குலசை தசரா திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் - தசரா குழு நிர்வாகிகள் பங்கேற்பு


குலசை தசரா திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டம் - தசரா குழு நிர்வாகிகள் பங்கேற்பு
x

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில் விடுவது உள்ளிட்ட 12 விதமான கோரிக்கைகள் தசரா குழு நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவிற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குலசை தசரா குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருட திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தசரா குழு நிர்வாகிகளுடன் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் ஆலோசனை நடத்தினார். அப்போது பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில் விடுவது உள்ளிட்ட 12 விதமான கோரிக்கைகள் தசரா குழு நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story