இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம்


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அறிவிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் தலைமைச்செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை புதிய அறிவிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் க.சந்திரமோகன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தலைமை என்ஜினீயர் சு.ரெகுநாதன், இணை ஆணையர்கள் அர.சுதர்சன், பொ.ஜெயராமன், ஆர்.செந்தில் வேலவன், ந.தனபால், கே.ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், 2023-2024-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எந்தெந்த திட்டங்களை கொண்டுவரலாம், இந்த ஆண்டு எத்தனை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2021-2022-ம் ஆண்டில் சட்டசபையில் வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளின் மூலம் 3 ஆயிரத்து 769 பணிகளும், 2022-2023-ம் ஆண்டில் 165 அறிவிப்புகள் மூலம் 5 ஆயிரத்து 61 பணிகளும் மேற்கொள்ளப்பட்டதில், நிறைவேற்றப்பட்டவை தவிர்த்து, தற்போது நடைபெற்றுவரும் இதர பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டுக்கு மேல் அறிவிக்கப்பட்டிருந்த 274 பணிகளின் முன்னேற்றத்தையும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.


Next Story