தீபாவளி கொண்டாடுவது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்


தீபாவளி கொண்டாடுவது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x

தீபாவளி கொண்டாடுவது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர்

தீபாவளி கொண்டாடுவது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பான, விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடுவது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான தொழிற்சாலைகள் தீத்தடுப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் 65 பட்டாசு கடைகள் உள்ளன. இவற்றை வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்பு துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பட்டாசு கடை உரிமம் வழங்கப்பட்ட கடைகளில் இதர பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. கடைகளில் அதிகபட்சம் 25 கிலோ அளவு இருப்பு வைத்து விற்பனை செய்யவேண்டும்.

கடையின் அருகே புகைப்பிடித்தல், பட்டாசு வெடிக்க அனுமதித்தல், கடைகளில் சிறுவர்களின் பொறுப்பில் பட்டாசு விற்க அனுமதித்தல், தீப்பொறி ஏற்படுத்தும் சாதனங்கள், அதிக வெப்பம் தரும் மின்விளக்குகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு நடைமுறைகள்

கடை தரைத்தளத்தில், 2 வாசல்கள் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். கல்யாண மண்டபங்களில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. பட்டாசுகளை தயாரிப்பாளர்கள் வடிவமைத்த பாதுகாப்பான பெட்டி போன்ற அமைப்புக்குள் வைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆய்வு செய்யும் அலுவலரால் தெரிவிக்கப்படும் தீப்பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தடையின்மை சான்று வழங்கும் போது இணைத்து அனுப்பப்படும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை எவை என்ற துண்டு பிரசுரத்தை விளம்பர பலகையில் கடையின் முன்புறம் வைக்க வேண்டும். அதன் ஒரு பிரதியை பட்டாசு வாங்க வருபவர்களுக்கு கடையின் உரிமையாளர் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

அவசர கால உதவி அழைப்புக்கு 101, 112, அருகில் உள்ள தீயணைப்பு நிலைய தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். விதிமுறைகள் மீறப்பட்டால் தடையின்மை சான்று தானாகவே ரத்தாகிவிடும். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிர்சேதம், பொருள்சேதத்திற்கு தாங்களே முழுப்பொறுப்பு ஏற்க ேவண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி, பட்டாசு கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story